கோர விபத்து – 36 பேர் பலி!

உத்தரகாண்டில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

உத்தரகாண்டின் அல்மோரா எல்லையில், ராம்நகரில் குபி அருகே 46 பயணிகளை ஏற்றி சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 36 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

இவ்விபத்து சம்பவம் அறிந்து இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், படுகாயமடைந்தவர்களை சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பஸ்ஸின் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்ததே விபத்திற்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. 




Powered by Blogger.