மட்டக்களப்பு கல்லடி 243 இராணுவ படை பிரிவின் கட்டளை அதிகாரியாக நியமனம் பெற்று கடமையை பொறுப்பேற்றக்கொண்ட
இராணுவ கட்டளை அதிகாரி கேனல் பிரதீப்களுபான மற்றும் லெப்டினன் கேனல் இந்திக குமார
ஆகியோர் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்து மரியாதையின் நிமிர்த்தம் மாவட்ட செயலாளர் திருமதி ஜஸ்டினா முரளிதரனை சந்தித்து கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார்.
கலந்துரையாடலின் போது மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் இதன் போது அரசாங்க அதிபரிடம் தெரிவித்துள்ளார்.
243 வது இராணுவ படை பிரிவு கட்டளை அதிகாரியாக பணியாற்றிய பிரிகேடியர் சந்திம குமர சிங்க இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள நிலையில் மட்டக்களப்பு கல்லடி 243 இராணுவ படை பிரிவிற்கு
புதிய இராணுவ கட்டளை அதிகாரியாக கேனல் பிரதீப் களுபான நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.