பொதுத் தேர்தலில் போட்டியிடும் 11 வேட்பாளர்கள் கைது!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் 11 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தமை, சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை காட்சிப்படுத்தியமை, சந்தேக நபர்களை விடுவிப்பதற்காக பொலிஸ் நிலையங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியமை ஆகிய குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 353 ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.



Powered by Blogger.