TMVP யின் பரப்பரை காரியாலயம் திறந்து வைப்பு - சுரேஷ்குமாரின் வெற்றிக்காக கொட்டும் மழையிலும் அணி திரண்ட மக்கள் கூட்டம்!!
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியினால் கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக தேர்தல் காரியாலயங்கள் திறந்து வைக்கப்பட்டு வரும் நிலையில் அதன் ஒரு அங்கமாக கட்சியின் இளைஞர் அணி செயலாளரும் தொழிலதிபருமான எஸ். சுரேஷ்குமார் தலைமையில் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதிக்கான பிரதான தேர்தல் பிரச்சார காரியாலயம் நேற்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னால் கிழக்கு மாகாண முதலமைச்சரும், முன்னால் இராஜாங்க அமைச்சரமான சிவ.சந்திர காந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நாடா வெட்டி அலுவலகத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் கட்சியின் தேசிய அமைப்பாளர் தஜீவரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மேற்படி தேர்தல் பரப்புரை காரியாலயத்தினை திறந்து வைத்திருந்தார்.
இந்நிகழ்வில் கட்சியின் ஆதரவாளர்கள், கிராமிய மட்ட அமைப்புக்களின் நிர்வாகிகள், ஊர் தலைவர்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அதிகளவிலான ஆதரவாளர்கள் குறித்த அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டதுடன், கட்சியின் இளைஞர் அணி செயலாளரும் தொழிலதிபரும் தற்போதைய வேட்பாளருமான எஸ். சுரேஷ்குமார் அவர்களுக்கு தமது பூரண ஆதரவை இம்முறை தேர்தலில் வழங்கவுள்ளதாக தெரிவித்தனர்.