TMVP கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வேட்பாளர் அறிமுக நிகழ்வு!!

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியானது நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தீர்மானிக்க பட்டிருந்ததன் அடிப்படையில்  மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அறிமுக நிகழ்வானது மட்டக்களப்பில் உள்ள தனியார் விடுதியில் இன்று  (16) திகதி நடைபெற்றது.

அந்த வகையில்  சிவ.சந்திரகாந்தன் அவர்களது தலைமையில் கட்சியின் படகு சின்னத்தில்  போட்டியிடும் இசடோர் ஜோசப் அன்ரனி கமலராஜா, கந்தையா கலைவாணி, நவரெத்தினம் திருநாவுக்கரசு, பூபாலப்பிள்ளை பிரசாந்தன், மகேந்திரன் ஹனேஸ், லியோன் சுஜித் லோறன்ஸ், சண்முகலிங்கம் சுரேஸ்குமார் உள்ளிட்ட எட்டு உறுப்பினர்களும் வேட்பாளர்களாக தம்மை அறிமுகம் செய்துவைத்ததுடன், எட்டுப்போருக்கும் கட்சியின் பிரதித் தலைவர் மற்றும் மகளீர் அணி செயலாளர் ஆகியோரினால் பொன்னாடை போர்த்தப்பட்டு மலர் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 
























Powered by Blogger.