மட்டக்களப்பு - கிரான்குளத்தில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாமொன்று இன்று இடம் பெற்றது.
பெரண்டினா நுண் நிதி நிறுவனத்தின் ஆரையம்பதி கிளையின் நுண்நிதி அதிகாரி எம்.டிலக்ஷி அவர்களின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இலவச கண் பரிசோதனை முகாமானது கிரான்குளம் கிராம அபிவிருத்திச் சங்க கட்டடத்தில் இடம் பெற்றது.
காலை 9.00 மணி முதல் பி.ப 1.00 மணி வரை இடம் பெற்ற இலவச கண் பரிசோதனை முகாமில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு பயன்பெற்றிருந்தனர்.
இவ் இலவச கண் பரிசோதனை முகாமிற்கு விசேட அதிதிகளாக பிரண்டினா நிறுவனத்தின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் வீ.பிரதிலிபன், கிரான்குளம் அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் மாசிலாமணி சுந்தரலிங்கம், கிரான்குளம் அபிவிருத்திச் சங்கத்தின் உப தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.
மேலும் இந்நிகழ்வில் பிரண்டினா நிறுவனத்தின் உயரதிகாரிகள் உத்தியோகத்தர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கண் பரிசோதனை நிபுணர் டீ.துஜீந்திரராஜ் தலைமையிலான குழுவினர் கண் பரிசோதனையினை மேற்கொண்டிருந்தனர்.
அதே வேளை குறித்த நுண் நிதி நிறுவனமானது தொடர்ச்சியாக பல்வேறுபட்ட சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.