சிலாபம் - சிங்கபுர பகுதியில் வீடொன்றில் பரவிய தீயில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
தாய், தந்தை மற்றும் மகள் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர், சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
2 மாடி வீட்டின் கீழ்மாடியிலுள்ள அறையொன்றிலிருந்து தாயின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தாயின் கழுத்தில் வெட்டுக்காயங்கள் காணப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
வீட்டின் வரவேற்பறையில் தந்தை மற்றும் மகளின் சடலங்கள் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
இது கொலையா அல்லது தீ விபத்தா? என்பது தொடர்பில் பொலிஸாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.