நாட்டினுடைய பாதுகாப்பு என்பது மிக முக்கியமானது, அது உறுதிப்படுத்தப்பட வேண்டும் - ஊடக சந்திப்பில் வியாழேந்திரன் தெரிவிப்பு
நாட்டினுடைய பாதுகாப்பு என்பது மிக முக்கியமானது, அது உறுதிப்படுத்தப்பட வேண்டும் உண்மையிலேயே நாங்கள் இதை ஒரு பகிடியான ஒரு விடயமாக எடுத்துக் கொள்ள முடியாது என முன்னால் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
உங்களுக்கு தெரியும் இந்த நாட்டிலே சுனாமி அடித்தபோகுது என தெரிவித்த போது பகடியாக எடுத்தார்கள் ஆனால் சுனாமி அடித்தது, அதே போன்று ஈஸ்டர் குண்டு தாக்குதல் நடைபெறப் போகின்றது என்று கூறிய போது பல சர்வதேச அமைப்புகளும் புலனாய்வு அமைப்புகளும் எச்சரிக்கை விடுத்தும் அதை சரியான முறையில் கருத்தில் கொள்ளாததால் மிகப்பெரிய ஒரு பாரிய தாக்குதல் இடம்பெற்று நூற்றுக்கணக்கான மக்கள் பலிக்கடாக்கள் ஆக்கப்பட்டார்கள். இன்றும் அந்த வேதனையோடு படுக்கையோடு பலர் இருக்கின்றார்கள். ஆகவே இவ்வாறான எச்சரிப்புகள் வருகின்ற போது நாங்கள் இதை ஒரு அசட்டுத்தனமாக எடுத்துக் கொள்ள முடியாது நிச்சயமாக இந்த விஷயத்திலே கவனம் கூர்ந்து நாட்டினுடைய பாதுகாப்பு தொடர்பில் மிக கவனமாக பாதுகாப்பு பிரிவுகள் செயல்பட வேண்டும்.
அதேபோல மக்களும் விழிப்பாக இருக்க வேண்டும். தறான விடையங்கள் மூலம் நாட்டுக்கு ஒரு ஆபத்து வந்துவிடக்கூடாது என்பதற்காக இதை எச்சரிக்கையாக நாம் கண்டுகொள்ள வேண்டும் ஒருபோதும் இந்த எச்சரிக்கைகளை நாம் அசட்டுத்தன்மையாக எடுத்து எடுத்துக்கொள்ளக் கூடாது.
எச்சரிக்கையை அறிவித்திருப்பது சாதாரண நபர்கள் அல்ல ஒரு முக புத்தகத்தில் எழுதுபவர் அல்ல, வெளிநாட்டு தூதரக காரியாலயங்கள் மற்றும் சர்வதேச சில அமைப்புக்கள் இது சம்பந்தமாக கூறியிருக்கின்றது. ஆகவே இதை ஒரு பகிடியாக கூறிவிட்டு செல்கின்ற ஒரு விடயம் அல்ல, இதை பொறுப்பு வாய்ந்தவர்களும் பொறுப்பு வாய்ந்த நிலையில் உள்ளவர்கள் கூறி இருப்பதினால் நாங்கள் இதை அசட்டுத்தனமாக எடுத்துக் கொள்ள முடியாது.
65 வருடங்கள் பழமை வாய்ந்த கட்சிகள் கூட நிராகரிக்கப்பட்டுள்ளது. அதே வேளை என்னை பலர் சமூக ஊடகங்களில் விமர்சித்துக் கொண்டிருக்கின்றார்கள். பல கோடிகளை நாம் பெற்றதாக கூறுகின்றார்கள் ஆனால் உண்மையிலேயே நாங்கள் இந்த முறை நிராகரிக்கப்படாமல் இருந்திருந்தால் நிச்சயமாக ஆயிரம் வீதம் நாங்கள் வெற்றி பெற்றிருப்போம் அதில் எந்த மாற்று கருத்துக்கும் இடம் இல்லை விஷமிகள் சிலரே எம்மை தற்போது இவ்வாறு தூற்றிக் கொண்டு திரிகின்றார்கள் எனவும் தெரிவித்தார்.