நல்வாழ்க்கை வாழக்கூடிய சுதந்திரமான நாடு வருங்காலத்தில் அமையும் - வேட்பாளர் சூரியா

எல்லோருக்கும் சமத்துவமான எல்லோரும் ஒன்றுபட்டு அன்பாகவும், இனிமையான நல்வாழ்க்கை வாழக்கூடிய சுதந்திரமான நாடு வருங்காலத்தில் அமையுமென தேசியமக்கள் சக்தி கட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்காக வேட்பாளராக போட்டியிடும் இளையதம்பி தவஞானசூரியம் (சூரியா) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு தேர்தல் தொகுதிக்குட்பட்ட மகிளுர் கிராமத்தில் அவரது தேர்தல் பரப்புரை காரியம் ஒன்றை திறந்து வைத்தார். இதன் போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ....

ஜனாதிபதி நாட்டை முன் கொண்டு செல்வதற்கு எதிர் வருகின்ற பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நாம் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் அனைவரும் ஒன்று கூடி ஒருமித்து எமக்கும், எமது வேட்பாளர்களுக்கும் வாக்களிப்பதன் மூலம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க முடியும்.  அதன் மூலம் ஜனாதிபதியினால் சுதந்திரமான நாட்டை உருவாக்குவதற்கும் சட்டமூலங்களை மாற்றி நிலைமைக்கு ஏற்றவாறு மக்கள் அன்பாகவும் இனிமையாகவும் சுதந்திரமாகவும் சமத்துவமாகவும் வாழக்கூடிய நிலைமை ஏற்படுத்தப்படும். 

அந்த சமத்துவம் நாட்டில் உள்ள அனைவரும் ஒரே செயற்பாட்டின் கீழ் நல்ல வருமானம் பெற்று ஆரோக்கியமான மக்களாக வாழ வைக்க வேண்டும் என்பதே எமது தலைவர் அனுரகுமார திசநாயக்க அவர்களின் தலையாய குறிக்கோள். அதைத்தான் அவர் தேர்தல் விஞ்ஞாபனம் மூலமும் வெளிப்படுத்தி இருக்கின்றார். இதைத்தான் எமது தேர்தல் பிரசாரத்திலும் மக்களிடம் தெரிவிக்கு மாறும் அவர் என்னிடம் பணிப்புரை விடுத்துள்ளார்.

எமது கிராமங்கள் எழுச்சியான, மகிழ்ச்சியான சிறந்த நல்ல வாழ்க்கையை வாழக்கூடிய ஒரு கிராமங்களாக மிளிரும் என்பதில் உறுதி. இதை எமது தலைவர் சகோதரர் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களின் சமர்ப்பணமாக மக்களிம் இதனை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.  

எனவே மக்கள் பொன்னான வாக்குகளை அளித்து அனுரகுமார திசாநாயக்கா அவர்களின் கரங்களை பலப்படுத்த எனக்கு வாக்களிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன். 

எதிர்காலத்தில் மக்கள் எதிர்பார்த்ததைவிட கிராமங்கள் அனைத்தும் ஒரு மறுமலர்ச்சியான செழிப்பான சிறப்பான கிராமங்களாக மாறும் அதற்காக மக்களுக்கு நாமும் சிறந்த ஒத்துழைப்பை வழங்குவோம் எனவே அனைவரும் ஒன்றிணைந்து நமது பகுதியை வளம் பெற வைப்போம் என அவர் இதன்போது தெரிவித்தார்.







Powered by Blogger.