மாணவ தூதுவ நிகழ்ச்சித்திட்டமானது மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி நவருபரஞ்சினி முகுந்தன் தலைமையில் உதவி மாவட்ட செயலாளர் ஜீ பிரணவன் மேற்பார்வையின் கீழ் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் (14) இடம் பெற்றது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் மாவட்ட செயலகம் இணைந்து சிறுவர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மாணவ தூதவ நிகழ்வு மாவட்டத்தில் இடம் பெற்றது.
மாவட்டத்தில் மூன்றாவது கட்டமாக பதிவு செய்யப்பட்ட 16 பாடசாலைகளைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட மாணவ தலைவர்களுக்கும் பொறுப்பாசிரியர்களுக்கும் இதன் போது தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினரினால் பயிற்சி கருத்தரங்குகள் மேற்கொள்ளப்பட்டது.
பாடசாலை மாணவ தலைவர்களுக்கு சிறுவர் உரிமைகள் தொடர்பான அறிவினை வழங்கி அவர்களை வலுவூட்டி அவர்கள் மூலம் பாடசாலைகளில் சிறுவர் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான ஓர் செயற்திட்டமாக அமைந்தது.
இந் நிகழ்வில் தேசிய சிறுவர் பாதுகாப் அதிகார சபையின் மாவட்ட உத்தியோகத்தர்களான திருமதி நிஷா ரியாஸ், த.பிரபாகர் மற்றும் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் என பலர் கலந்து கொண்டனர்.