அம்பாரை சவளக்கடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட கிட்டங்கியை அண்டிய ஆற்று பகுதியில் பெண் ஒருவரை முதலை இழுத்துச் சென்றுள்ளது.
கிட்டங்கியை அண்டிய பிரதேசமான சொறிக்கல்முனை புட்டியாறு பகுதியில் பெண் ஒருவரை முதலை இழுத்து சென்றுள்ள துயரச் சம்பவம் நேற்று (14) திகதி மாலை இடம் பெற்றுள்ளது.
சொறிக்கல்முனையைச் சேர்ந்த 58 வயதான பெண்னெருவரையே முதலை இழுத்துச் சென்றுள்ளது.
சவளைக்கடை பொலிசார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.