கணபதிப்பிள்ளை மோகனுக்காக தேற்றாத்தீவில் அணிதிரண்ட இளைஞர்கள்!!

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இம்முறை சுயேட்சையாக களமிறங்கியுள்ள சமூக செயற்பாட்டாளர் கணபதிப்பிள்ளை மோகனுக்கு  இளைஞர்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருவதாக தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அபிவிருத்தி அரசியல், கிழக்கு நமதே என்று கூறி கொண்டிருக்கின்றார்கள்.

கிழக்கிற்காக இவர்கள் என்ன செய்தார்கள், 2000 கோடி ரூபாயை கொண்டு வந்து பாதைகளை போட்டு 10% கமிஷன், அதன் ஊடாக  200 கோடி ரூபாயை தன் வசப்படுத்தினார். அவருக்கு துணிவிருந்தால்  சொல்லட்டும் நான் கமிஷன் வாங்கவில்லை என்று சொல்லட்டும்?  என கணபதிப்பிள்ளை மோகன் தேற்றாத்தீவில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.






Powered by Blogger.