தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தேர்தல் பரப்புரை காரியாலயங்களின் வரிசையில் மற்றொரு காரியாலயமானது கட்சியின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச குழு செயலாளர் சசிகரன் தலைமையில் பெரியகல்லாறு கிராமத்தில் (23) திறந்து வைக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தேர்தல் பரப்புரை காரியாலயத்தினை திறந்து வைத்திருந்தார்.
இதன் போது கட்சியின் பொதுச் செயலாளரும் வேட்பாளருமான பூபாலபிள்ளை பிரசாந்தன், வேட்பாளர் லியோன் சுஜித் லோறன்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்ததுடன் கட்சியின் பிரதேச குழு தலைவர் மணிகரன் சித்தி விநாயகர் ஆலய பரிபாலன சபையினர் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர் .