சுயேட்சை வேட்பாளர் லவகுமாருக்காக கல் குடாவில் அணிதிரண்ட இளைஞர்கள்!!

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இம்முறை சுயேட்சை குழு - 2 முந்திரியம் பழம் சின்னத்தில் 6 இலக்கத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில்  களமிறங்கியுள்ள சமூக செயற்பாட்டாளர் வி.லவகுமாரிற்கு இளைஞர்கள் மத்தியில் ஆதரவு பெருகிவருவதாக வே ட்பாளர் வி.லவகுமார் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் தான் பல்வேறு பட்ட உரிமை சார்ந்த அறவழிப் போராட்டங்களில் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்திருந்த நிலையில், தன்னை மக்கள் அதிகதிகமாக வாக்களித்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தால் வடகிழக்கு உள்ளிட்ட அனைத்து தமிழ் மக்களிற்காகவும் தான் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பி தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வை பெற்றுத் தருவதாக கூறியுள்ளார்.

அத்தோடு எமது சமூகத்திற்கு அதிகமாக சுகாதார பிரச்சனைகள் காணப்படுவதனால் முதல் கட்டமாக தன்னால் மலசல கூடங்களை கட்டித் தர முடியுமெனவும், கல்வி கற்பதற்கும் பல்கலைக்கழகம் செல்வதற்கும் வசதியற்ற மாணவர்களுக்கு தம்மால் புலம்பெயர் உறவுகளின் உதவிகளுடன் உதவி முடியும் எனவும் தெரிவித்த வீ.லவகுமார் இவ்வாறான உதவிகளை தான் செய்வதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

கல்குடா தொகுதி இளைஞர்கள் தனது இல்லம் தேடி வந்து தமக்கு ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.







Powered by Blogger.