ஏப்ரல் 21 ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் வேட்பாளர் வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பாராளுமன்ற பொது தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத் மத தலைவர்களை சந்தித்து ஆசி பெற்றார்.
இதற்கு அமைய மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் மேலாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராஜ் மற்றும் முன்னாள் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை ஆகியோரை சந்தித்து கலந்துரையாடி ஆசி பெற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கயிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.