சுவாமி விவேகானந்தர் திருவுருவச் சிலையினை திறந்து வைக்கும் நிகழ்வு!!

மட்டக்களப்பு - கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரி வளாகத்தினுள் புதிதாக நிறுவப்பட்டுள்ள சுவாமி விவேகானந்தர் திருவுருவச் சிலையினை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (18) காலை 7.30 மணிக்கு பாடசாலை முன்றலில் வைபவ ரீதியாக இடம்பெற்றது.

கல்லடி, உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியின் அதிபர் நவகீதா தர்மசீலன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு ராமகிருஷ்ண கமிஷனின் பொது முகாமையாளர், சுவாமி நீலமாதவானந்த் மஹாராஜ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். 

அதிதிகளின் வருகையினைத் தொடர்ந்து பூமாலை அணிவித்து வரவேற்பு நடனத்துடன் அதிதிகளை பாடசாலை சமூகத்தினர் வரவேற்றதுடன். சமய வழிபாடுகளுடன் சுமார் 20 அடி உயரம் கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ள விவேகானந்தர் திருவுருவச் சிலையின் பெயர்ப்பலகை திரை நீக்கம் செய்து திறந்து வைக்கப்பட்டது. 

இந் நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும் விவேகானந்தர் நற்பணி மன்றத்தின் தலைவருமான டாக்டர் ஆர். முரளீஸ்வரன், முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சி. புண்ணியமூர்த்தி, மட்டக்களப்பு வர்த்தக சங்கத் தலைவர் எம். செல்வராசா, விவேகானந்தர் நற்பணி மன்றத்தின் உறுப்பினர்கள், பாடசாலை பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.








Powered by Blogger.