நள்ளிரவு முதல் பெற்றோல் 95, சுப்பர் டீசல் விலைகள் குறைப்பு

நள்ளிரவு முதல் பெற்றோல் 95, சுப்பர் டீசல் விலைகள் குறைப்பு - பெற்றோல் 92, ஒட்டோ டீசல், மண்ணெண்ணெய் விலைகளில் மாற்றமில்லை.

நள்ளிரவு (01) முதல் அமுலாகும் வகையில் பெற்றோல் 95, சுப்பர் டீசல் ஆகிய எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

பெற்றோல் 92, ஒட்டோ டீசல், மண்ணெண்ணெய் விலைகளில் மாற்றமில்லை.

அந்த வகையில் CEYPETCO மற்றும் LIOC எரிபொருள் நிறுவனங்கள் பின்வருமாறு எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளன.


CEYPETCO/ LIOC

பெற்றோல் 95: ரூ. 6 இனால் குறைப்பு – ரூ. 377 இலிருந்து ரூ. 371

சுப்பர் டீசல்: ரூ. 6 இனால் குறைப்பு – ரூ. 319 இலிருந்து ரூ. 313

பெற்றோல் 92: விலையில் மாற்றமில்லை – ரூ. 311

ஒட்டோ டீசல்: விலையில் மாற்றமில்லை – ரூ. 283

மண்ணெண்ணெய்: விலையில் மாற்றமில்லை – ரூ. 183

இதேவேளை, SINOPEC நிறுவனமும் எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளது



Powered by Blogger.