மட்டக்களப்பில் ஒரே பிரதேசத்தில் 8 வீடுகளில் கொள்ளை!!

மட்டக்களப்பு மண்டூர் பிரதேசத்தில் ஒரே இரவில் 8 வீடுகள் உடைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளதுடன், இரு வீட்டில் இருந்து 60 பவுண் தங்க நகைகள் திருடிச் செல்லப்பட்ட சம்பவம் நேற்று (27) இரவு இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் முதலாம் பிரிவிலுள்ள பிரதேசத்தில் சம்பவதினமான நேற்று இரவு அந்த பகுதியில் உள்ள 8 வீடுகளின் யன்னல் கதவு மற்றும் சமையலறை யன்னல் கதவுகளை உடைத்து வீடுகளுக்குள் உள்நுழைந்த திருடர்கள் அங்கிருந்த நகைககளை திருடிச் சென்றுள்ளனர்.

இதன்போது இரு வீடுகளில் 60 பவுண் தங்க ஆபரணங்களை திருடியதுடன், ஏனைய வீடுகளில் எந்த விதமான பொருட்களும் கிடைக்காததால் அங்கிருந்து திருடர்கள் ஏமாற்றத்துடன் சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அங்கு மோப்ப நாய்களுடன் தடயவியல் பிரிவு பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை ஒரே இரவில் ஒரு பிரதேசத்தில் 8 வீடுகளை உடைத்து திருடர்கள்; திருடியதையடுத்து அந்தபகுதி மக்கள் அச்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 





Powered by Blogger.