வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையின் லியோ கழக தலைவராக செல்வி. லியோ.சேஷாங்கி சுரேஸ் பதவியேற்பு!!



மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்திற்குட்பட்ட வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையின் லியோ கழகத்தின் புதிய அங்கத்துவ மாணவிகளை சேர்க்கும் அங்குரார்ப்பண நிகழ்வு பாடசாலை குறோப்ட் மண்டபத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றது. 

இந்நிகழ்வு மாலை 4.00 மணியளவில் கடந்த வருட (2022/2023) தலைவி செல்வி. லியோ.திசாரி சுரேஸ் றொபேட் அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. 

இந்நிகழ்வின் போது இக்கழகத்தின் இவ்ஆண்டுக்கான புதிய தலைவராக செல்வி.லியோ.சேஷாங்கி சுரேஸ் அவர்கள் பதவியேற்றார். 

இந்நிகழ்வை சிறப்பிக்கும் முகமாக சிரேஸ்ட லயன்ஸ் கழக உறுப்பினர்கள், லியோ கழக உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள், பிரதி அதிபர்கள் மற்றும் லியோ கழக ஆலோசகர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். 











Powered by Blogger.