எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று வவுனியாவில் நடைபெற்றது.
இதன்போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.