மட்டக்களப்பு ஆயித்தியமலை புனித சதா சகாய மாதா திருத்தலத்தின் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!!
மட்டக்களப்பு ஆயித்தியமலை புனித சதா சகாய மாதா திருத்தலத்தின் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!!
மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கே அமைந்துள்ள கத்தோலிக்க ஆலயங்களுள் புகழ்பெற்ற ஆயித்தியமலை புனித சதா சகாய மாதா திருத்தலத்தின் 70ஆவது வருடாந்த திருவிழா 30ம் திகதி வௌ்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
கரடியனாறு சந்தியிலிருந்து அன்னையின் திருச்சொருப பவனி பிற்பகல் 4 மணியளவில் ஆலயத்தை வந்தடைந்து, அருட்தந்தை ஜெரிஸ்டன் வின்சன் தலைமையில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் என்.சத்தியானந்தி அவர்களின் பங்குபற்றலுடன் மாலை 5 மணியளவில் கொடியேற்றம் இடம் பெற்று முதலாம் நவநாள் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.
எதிர்வரும் 7ம் திகதி சனிக் கிழமை காலை 5மணிக்கு பாதயாத்திரை ஆரம்பமாகும் எனவும் வழமைபோன்று மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்திலிருந்து ஆரம்பமாகி வவுணதீவு ஊடாகவும், மற்றைய யாத்திரை செங்கலடி புனித நிக்கலஸ் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி கரடியனாறு ஊடாகவும் இரு வழிப் பாதயாத்திரையாக ஆயித்தியமலை புனித சதா சகாய மாதா ஆலயத்தை வந்தடையும்.
அன்னையின் இறுதி பெருவிழா கூட்டுத்திருப்பலி மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் எதிர்வரும் 8ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு இடம்பெற்று திருவிழா இனிதே நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.