கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொத்துக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய ஆடிப்பூர பால்குட பவனி இன்று (07) திகதி புதன்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.
மாரசூரனை வதைத்து மாரியம்மன் எனப் பெயர் கொண்ட உலகமெல்லாம் இரட்சத்துவரும் அன்னை மாரியம்மன் அகல் விளக்கு எரியவைத்த காலத்துக்கு முந்திய காலமாக மட்டக்களப்பில் அருள்பாலித்துவருகின்ற அம்பாளின் ஆடிப்பூர பால்குட பவனி பெருவிழாவை முன்னிட்டு ஆயிரத்துக்கு மேட்பட்ட அடியார்கள் மஞ்சள் நிற கலாச்சார ஆடை அணிந்து பால்குட பவனியில் ஈடுபட்டனர்.
ஆலய குரு பிரம்ம ஸ்ரீ பாலகிருஷ்ண சர்மா குருக்களின் தலைமையில் விநாயர் வழிபாடுகளுடன் ஆரம்பமாகி மட்டக்களப்பு ஆணைப்பந்தி ஆலயத்தில் இருந்து பிரதான கும்பம் மற்றும் பாற்குடப்பவனி ஆரம்பமாகி மத்திய வீதி ஊடாக திருமலை பிரதான வீதியூடாக பவணியாக கொத்துக்குளத்து அம்பாள் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தை சென்றடைந்தது.
ஓம் சக்தி ஓம் பராசக்தி என உச்சரித்தவாறு அடியார்கள் தமது சிரசினில் பால்குடங்களை சுமந்துவந்து மூலமூர்த்தி மற்றும் பாரிபால மூர்த்திகளுக்கு விசேட அபிஷேக பூசைகளும் நடைபெற்று அதனைத்தொடர்ந்து விசேட பூஜைகள் நடத்தப்பட்டதுடன் வேத, மேள வாத்தியங்கள், நாதங்கள் முழங்க அடியார்களின் அரோகரா கோசத்துடன் அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.