மட்டக்களப்பு முச்சக்கர வண்டி நரம்புரி சங்க நிர்வாகிகளினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இலவச சமூக சேவை செயற்பாடுகளுக்கான கூடாரம், கதிரைகள், ஒலிபெருக்கி உள்ளிட்ட பொருட்களானது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தன் அவர்களினால் மேற்படி நிர்வாகிகளிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
மண்முனை பற்று பிரதேச செயலக பிரிவில் குறித்த முச்சக்கர வண்டி நலம்புரி சங்கமானது மரண வீடுகளுக்கான இலவச செயத்திட்டத்தினை முன்னெடுத்து வரும் நிலையில் தமது சேவையினை மேலும் விஸ்தரிக்கும் பொருட்டு மேற்படி உபகரணங்களை பெற்று தருமாறு கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தன் அவர்களிடம் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் 01 மில்லியன் ரூபாய் பெறுமதியான மேற்படி உபகரணங்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டியிருந்தது.
இராஜாங்க அமைச்சர் சிவ. சந்திரகாந்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட 103 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் பல கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரின் பிரத்தியேக செயலாளரும் கட்சியின் தேசிய அமைப்பாளருமான தம்பிராஜா தஜீவரன், இளைஞர் அணி செயலாளர் சண்முகலிங்கம் சுரேஷ்குமார், மகளிர் அணி செயலாளர் திருமதி சுசிகலா அருள்தாஸ், மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளர் உருத்திரமூர்த்தி யுவநாதன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் முச்சக்கர வண்டி நரம்புரி சங்க நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.