போதைக்கு எதிரான இளைஞர் நாம் எனும் தொனிப் பொருளில் காத்தான்குடியில் இளைஞர்களுக்கான ஒன்று கூடல்!!

போதைக்கு எதிரான இளைஞர் நாம் எனும் தொனிப் பொருளில் இளைஞர்களுக்கான ஒன்று கூடல் காத்தான்குடி பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன ஏற்பாட்டில் காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மண்டபத்தில் நேற்று (31.07.2024) புதன் கிழமை நடைபெற்றது.

காத்தான்குடி பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் பொறியியலாளர் ஏ.எம்.தெளபீக் தலைமையில் நடைபெற்ற இந்த ஒன்று கூடலில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கலாநிதி கே.அஜித் ரோஹன கிழக்கு மாகாண இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஏ.குலதுங்க  மட்டக்களப்பு கல்லடி இராணுவ முகாம் பிரிகேடியர் சந்திம குமாரசிங்க உட்பட இராணுவ பொலிஸ் அதிகாரிகள் சம்மேளன பிரமுகர்கள் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது அபாயகர அவுடதங்கள் கட்டுப்பாடு சபையின் வடக்கு கிழக்கு மாகாண இணைப்பாளர் றஹாத் விஷேட உரையை நிகழ்த்தியதுடன்  காத்தான்குடி பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பிரதி  தலைவர் சத்தார் ஆரம்ப உரையை நிகழ்த்தினார்.

இதில்  கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கலாநிதி கே.அஜித் ரோஹன கிழக்கு மாகாண இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஏ.குலதுங்க ஆகியோர் சிறப்புரையை நிகழ்த்தினார்கள்.

இதன் போது காத்தான்குடி பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால்  கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கலாநிதி கே.அஜித் ரோஹன கிழக்கு மாகாண இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஏ.குலதுங்க மற்றும்   தேசிய போதைப் பொருள் கட்டுப்பாடு சபையின் வடக்கு கிழக்கு மாகாண இணைப்பாளர் றஹாத்  ஆகியோருக்கு  நினைவுச் சின்னம் வழங்கி கெளரவித்தனர்.

















Powered by Blogger.