மட்டக்களப்பு குருக்கள்மடம் பகுதி கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குருக்கள்மடம் இந்து மயானத்திற்கு அருகாமையில் கண்டெடுக்கப்பட்ட 30 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலத்தை மீட்ட களுவாஞ்சிகுடி பொலிசார் குறித்த சடலத்தை இனங்காண்பதற்காக பொது மக்களின் உதவியை நாடி நிற்பதுடன், மேலதிக விசாரனைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
அதே வேளை களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற உத்தரவிற்கமைய சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.