திருகோணமலை மொறா வெவ பிரதேச செயலக பிரிவில் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதியில் ஒதுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களுக்கான ஆரம்ப நிகழ்வு மொறா வெவ பிரதேச செயலாளர் ஏ.நவேஸ்வரன் தலைமையில் இடம் பெற்றது.
பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் மூலமாக முதற் கட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ள 10 வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்விற்கு பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரும் திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கபில நுவான் அத்துக்கொறள அவர்கள் கலந்து சிறப்பித்துள்ளார். மேலும் இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக மொறவெவ பிரதேச சபையின் முன்னால் தவிசாளர் ஜகத் கலந்து சிறப்பித்துள்ளார்.
மொறாவெவ பிரதேச செயலக பிரிவில் 41 வேலைத்திட்டங்கள் 15.8 மில்லியன் வரவு செலவு திட்ட நிதியின் ஊடாக மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதைகள், விகாரைகள் மற்றும் பொது இடங்கள் என பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களுக்கான அங்குரார்ப்பண நிகழ்வுகள் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் கபில நுவான் அத்துக்கொறள அவர்களது பங்கேற்புடன் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.