மாகாண சபையில் உயர் பதவிகளில் இருந்து கடந்த வருடம் ஓய்வு பெற்ற சில அதிகாரிகளுக்கு தொடர் கடமையாற்ற அனுமதியளிக்க கிழக்கு மாகாண ஆளுணருக்கு அதிகாரம் வழங்கியது யார் என ஈரோஸ் கட்சியின் செயலாளர் நாயகம் இரா.பிரபாகரன் மட்டக்களப்பில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்த நாட்டிற்கு கிடைத்த பொக்கிசமா இப்போதைய ஜனாதிபதியை நான் பார்க்கின்றேன். அதை நான் தொடர்ச்சியாக கூறி வருகின்றேன். செந்தில் தொண்டமான் இந்த மக்களிடம் கப்பம் கோருவதன் ஊடாக ஜனாதிபதியின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கின்றார்.
இவர் வாகரையில் பாம் ஒயில் கம்பனி எனும் பெயரில் பல ஏக்கர் காணிகளை கொள்ளையிடுகின்றார் அதனை கொடுக்க மறுக்கும் அதிகாரிகளை அச்சுறுத்துகின்றார்கள்.
1993 ஆண்டு அமைச்சர் அவையின் அங்கிகாரத்துடன் கல்முனை தமிழ் பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக இருந்து வந்திருந்த நிலையில் தற்போது அது உப பிரதேச செயலகமாக மாற்றியிருக்கின்றார்கள்.
அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்களை ஆளுநர் செந்தில் இதுவரை போய் சந்தித்துள்ளாரா என்றால் அது கேள்விக்குறியாகத்தான் உள்ளது.
நல்ல பணியை எமது மக்களுக்காக செய்து கொண்டிருக்கும் நாடாக இந்தியா இருக்கின்றது, அதன் நற்பெயரை கெடுக்கும் வண்ணம் செந்தில் தொண்டமான் செயற்பட கூடாது என இந்திய துணை தூதுவரை சந்தித்து தான் அண்மை கதைத்ததாகவும், பொது வேட்பாளர் என்பதுடன் ஈரோஸ் எந்த வகையிலும் உடன்பாடில்லை என்றார்.