கல்லடி முகத்துவாரம் விபுலானந்த வித்தியாலயத்தின் 64 வது வருட பூர்த்தியினை முன்னிட்டு பழைய மாணவர்களிடையே கிரிக்கெட் சுற்று போட்டி!!
மட்/கல்லடி முகத்துவாரம் விபுலானந்த வித்தியாலயத்தின் 64 வது வருட பூர்த்தியினை முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் பழைய மாணவர்களுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்று போட்டி நேற்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பாடசாலையின் அதிபரின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இப்போட்டி நிகழ்வில் 243 வது ராணுவ படைப்பிரிவின் பிரிகேட் கொமாண்டர் சந்திம குமாரசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்ததுடன், பாடசாலையின் பிரதி அதிபர் பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
சத்திய பிரமாணம் செய்து போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், 15 பிரிவுகளை கொண்ட இந்த போட்டி நிகழ்வானது நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டு இறுதி போட்டி நிகழ்வுகள் இன்றைய தினம் இடம் பெற்று, சாதனை மாணவர்கள் பாராட்டும், மாணவர்களை வழிப்படுத்திய ஆசிரியர்கள் கௌரவமும் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.