2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இன்று (06) திகதி ஆரம்பமாகிறது.
452,979 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதில் மூன்று இலட்சத்து 87,648 பாடசாலை விண்ணப்பதாரர்களும், 65,331 தனியார் விண்ணப்பதாரர்களும் அடங்குவர்.
நாடளாவிய ரீதியில் 3,527 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதாகவும், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார் நிலையில் உள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாடளாவிய ரீதியில் பல இடங்களில் விசேட பரீட்சை நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம் இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் 111 நிலையங்களில் சாதாரண தர பரீட்சை நடைபெறுகின்றது.
இந்த 111 நிலையங்களுக்கும் தலைமை இடமாக 14 நிலையங்கள் காணப்படுவதுடன், மொத்த பரீட்சாத்திகளாக 13902 மாணவர்களும், இதில் பாடசாலை ரீதியாக 10037 பேரும், தனியாராக 3865 பேரும் பரீட்சை எழுதவுள்ளனர் .
அதன் அடிப்படையில் தமிழ் மொழி மூலமாக 13826 பேரும் , சிங்கள மொழி மூலமாக 10 பேரும், ஆங்கில மொழி மூலமாக 66 பேரும் பரீட்சைக்கு தோன்றவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.