மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் T20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் அங்குரார்ப்பண நிகழ்வு!!

மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் T20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் அங்குரார்ப்பண  நிகழ்வு கோட்டைமுனை விளையாட்டு கிராம புற்தரை மைதானத்தில் நேற்று (01) திகதி இடம் பெற்றது.

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் மற்றும் அம்பாறை மாவட்ட மேஜர் ஜனரால் விபுலசந்திரஶ்ரீ  உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் T20  சுற்றுப் போட்டியானது  நாட்டில் தெரிவு செய்யப்பட்ட  முதல் பிரிவைச் சேர்ந்த முன்னனி பாடசாலை மாணவர்களுக்கிடையிலான கண்காட்சி ரீதியான கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள் இடம் பெறவுள்ளன.

19 வயதிற்குட்பட்ட வீரர்களுக்கான கிரிக்கட் சுற்றுப்போட்டியின் மூலம் உள்ளூர்  கிரிக்கட் வீரர்களை மேம்படுத்தி அபிவிருத்தி செய்யும் நோக்கத்தின் ஒரு அங்கமாக இப் போட்டிகள்  (01) திகதியில் இருந்து எதிர்வரும் (07) திகதி வரை இப் போட்டிகள் இடம் பெறவுள்ளன.

இதன் போது கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியில் உள்ள நுட்பங்களை இப் பிரதேச வீரர்கள் கற்றுக் கொள்வதற்குமான களமாக இப் போட்டிகள் அமையவுள்ளன.

வெளிமாவட்டங்களைச் சேர்த்த பிரபல பாடசாலை மாணவர்கள்  இப் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளமை  குறிப்பிடத்தக்கதாகும்.

19 வயதிற்குட்பட்ட  உலக கிண்ண சுற்றுப் போட்டியில் பங்குபற்றிய இலங்கை  வீரர்களும் இப் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளமை  சிறப்பம்சமாகும்.

கோட்டைமுனை   விளையாட்டுக் கழகதத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முதல் தடவையாக பிரித்தானியாவின் கிரிக்கெட் தரம் இரண்டினை நிறைவு செய்த  பயிற்றுவிப்பாளர் மலிந்த சுரபுலிக்கே கோட்டை முனை விளையாட்டுக்கழக வீரர்களுக்கு பயிற்சி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில்   மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஶ்ரீகாந், 243 இராணுவ படைப்பிரிவின் கட்டளை தளபதி பிரிகேடியர் சந்திர குமாரஶ்ரீ, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ. சுகுணன், பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் மற்றும் உயர் அதிகாரிகள், விளையாட்டுக் கழக  பணிப்பாளர்கள், கழக உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


















Powered by Blogger.