அறிவிச்சுடர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காத்தான்குடியில் கௌரவிப்பு!!

இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனம் நாடளாவிய ரீதியில் நடாத்திய அறிவுச்சுடர் போட்டி நிகழ்ச்சி அண்மையில் கொழும்பில் இடம் பெற்றது.

இப் போட்டியில் காத்தான்குடி மத்திய கல்லூரி சார்பாக பங்கு பற்றி தேசிய ரீதியில் முதலிடத்தைப் பெற்றுக் கொண்ட மாணவர்களான FRM.Munsif, MRM.Usama Nusaith, MJM.Shafir ஆகியோர் ஒக்ஸி காடன் சுற்றுச்சூழல் பசுமைக் கழகத்தினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். 

புனித நோன்புப் பெருநாள் தினத்தன்று ஒக்ஸி காடன் சுற்றுச்சூழல் பசுமை கழகத்தினர் காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜும்மா பள்ளிவாயல் வளாகத்தில் நடத்திய ஈத் வசந்தம் நிகழ்ச்சியின் போது பாராட்டி கௌரவித்து நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

ஒக்ஸி காடன் சுற்றுச்சூழல் பசுமை கழகத்தின் தலைவர் எல்.எம். கமால்தீனின் ஏற்பாட்டில்  இடம்பெற்ற இந்நிகழ்வில் காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜும்ஆ பள்ளிவாயலின் உப தலைவர்களான கே. ஏ. றஹீம், எம். அபுல்ஹஸன் மற்றும் பீ. எம். றமீஸ் உட்பட நிறருவாகிகள், சட்டத்தரனி ஆர்.எம்.றுஸ்வின் மற்றும் ஊர் பிரமுகர்கள் சிறுவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





Powered by Blogger.