மட்டக்களப்பில் மேஜர் ஜெனரல் விபுலசந்திரசிறியிற்கு பிரியாவிடை நிகழ்வு!!

மட்டக்களப்பில் மேஜர் ஜெனரல்  விபுலசந்திரசிறியிற்கு பிரியாவிடை நிகழ்வு  கல்லடியில் இடம் பெற்றது.

இலங்கை இராணுவத்தின் 243  படைப்பிரின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சத்திம குமாரசிங்கவின் ஏற்பாட்டில் இடம் பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் கலந்து கொண்டார்.

இலங்கை இராணு படையில் 1989ம் ஆண்டு இணைந்து கொண்ட மேஜர் ஜெனரல் விபுல சத்திரஸ்ரீ 34 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தில்  சேவையாற்றியுள்ளார்.

மேஜர் ஜெனரல் அமேரிக்கா, சுவிஸ், இந்தியா, நெபாளம் போன்ற பல நாடுகளில்  இராணுவத்தின் உயர் கல்வியினை கற்றுத்தேர்ச்சி பெற்று எமது நாட்டுக்கு சேவை வழங்கியுள்ளார்.

மேலும் சூடான் நாட்டிற்கு ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படையில் எமது நாட்டின் சார்பாக இணைத்து கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.

இப் பிரியாவிடை நிகழ்வின் போது கருத்து தெரிவித்த மேஜர் ஜெனரல்  எமது நாட்டுக்கு அர்ப்பணிப்புடன் சிறந்த சேவை வழங்கியதுடன் சேவையில் தாம் பெற்ற நினைவுகளோடு ஓய்வு பெறுவதாக கருத்து தெரிவித்தார்.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்  அஜித்ரோகன, கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதி, மட்டக்களப்பு மாவட்ட  பிரதி பொலிஸ்மா அதிபர் லியனகே, முப்படை உயர் அதிகாரிகள், விரிவுரையாளர்கள், வர்த்தக பிரமுகர்கள், சிவில் சமூக பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



Powered by Blogger.