மட்டு சுய தொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தின் முயற்சியால் Kallady Bridge Market இல் வியாபாரத்தில் ஈடுபடும் பெண் தலைமை தாங்கும் 30 குடும்பங்களை சேர்ந்த சுய தொழில் முயற்சியாளர்களுக்கு பல இலட்சங்கள் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வாழ்வாதாரத்திற்கான சுய தொழிலை தொடர முடியாது உள்ள குடும்பங்களை தோடி வாழ்வாதாரத்திற்கு கரம் கொடுக்கும் நோக்கில் பிரபல தொழிலதிபரும், சமூக செயற்பாட்டாளரும், East Lagoon Hotel உரிமையாளரும், மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவருமான தேசபந்து முத்துகுமார் செல்வராசா அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில பல்வேறு பட்ட உதவிகளை செய்து வருகின்றார். அந்த வகையில் மட்டு சுய தொழில் முயற்சியாளர்கள் சம்மேளனம் விடுத்த வேண்டு கோளுக்கு அமைய மூன்று கட்டங்களாக பல இலட்சங்கள் பெறுமதியான உதவிகளை Kallady Bridge Market இல் உள்ள சுய தொழில் முயற்சியாளர்களுக்காக வழங்கி வைத்துள்ளார்.
அதன் முதல் கட்டமாக சுமார் 200,000 இலட்சம் செலவில் கூடாரத்தின் மேற்கூரை புதிதாக அமைத்து வழங்கப்பட்டதுடன், இரண்டாம் கட்டமாக சேதமடைந்திருந்த கூடாரம் சீர் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மூன்றாம் கட்டமாக அவர்களுக்கான Locker வசதியுடனான நிரந்தர மேசைகள் பல இலட்சம் ரூபாய் செலவில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறாக வாழ்வாதார உதவிகளை மேற்கொண்டுவரும் தேசபந்து செல்வராசா அண்ணாச்சிக்கு மட்டு சுய தொழில் முயற்சியாளர்கள் சம்மேளனமும் சுய தொழில் முயற்சியாளர்களும் தமது கோடான கோடி நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
குறித்த உதவித் திட்டங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் தொழிலதிபர் தேசபந்து மு.செல்வராசா, சமூக செயற்பாட்டாளர் ஆர்.வசந்தராசா, சமூக செயற்பாட்டாளரும், சமாதான நீதவானும், சிரேஸ்ட ஊடகவியலாளரும் மட்டு சுய தொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தின் ஸ்தாபக தலைவருமான உ.உதயகாந்த் உள்ளிட்ட பலரும் இதன் போது கலந்து கொண்டு உதவித் திட்டங்களை வழங்கி வைத்துள்ளனர்.