மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டு தாக்குதல் இடம் பெற்று 5 வருட நினைவை முன்னிட்டு மட்டக்களப்பு கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட வழிபாடுகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.
அதே வேளை சீயோன் தேவாலயத்தில் உயிரிழந்த உறவுகளுக்காகவும் காயப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டியும் புதிய சீயோன் தேவாலயத்தில் பிரதான போதகர் ரொஷான் மகேசன் தலைமையில் விசேட ஆராதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த இறை பிரார்த்தனைகளில் அதிகளவிலான இறை விசுவாசிகள் பங்கேற்றிருந்ததுடன் மட்டக்களப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.