தகவல் யுகத்தில் உண்மைகளைக் கண்டறிதல்" எனும் தொனிப் பொருளில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஊடக ஆர்வலர்களுக்கான இரு நாள் செயலமர்வு வெள்ளி (29) மற்றும் சனிக்கிழமை (30) ஆகிய தினங்களில் கல்லடி கிறீன்கார்டின் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.
இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இச்செயலமர்வில், விடிவெள்ளி பத்திரிகை ஆசிரியரும், ஊடகப் பயிற்றுவிப்பாளருமான எம்.வீ.எம்.பைரூஸ் மற்றும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனப் பயிற்சி இணைப்பாளர் கீர்த்திகா மகாலிங்கம் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டனர்.
செயற்கை நுண்ணறிவுத்திறனை பயன்படுத்தி எவ்வாறு செய்திகளின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளுதல் மற்றும் புலனாய்வு செய்தல் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டப்பட்டது.
மற்றும் செயற்கை நுண்ணறிவுடன் செயற்படும் புதிய இயங்கு தளங்களை எவ்வாறு பயன்படுத்தல் தொடர்பாகவும் விளக்கங்கள் இதன் போது வழங்கப்பட்டது.
இதில் கலந்து கொண்ட 20 ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஊடக ஆர்வலர்களுக்குப் பயிற்சியின் நிறைவில் சான்றிதழ்கள் மற்றும் ரீசேட் என்பன வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.