மட்டு நாவலடியிலுள்ள அன்னை பூபதியின் சமாதியில் 36 ஆண்டு நினைவு தினத்தையிட்டு சமய கிரிகைகளுடன் உறவினர் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

அன்னை பூபதியின் 36 வது ஆண்டு நினைவேந்தலையிட்டு மட்டக்களப்பு நாவலடியிலுள்ள அவரது சமாதியில் அன்னையின் மகள் உறவினர்கள் மற்றும் அப்போது அவருடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட அன்னையர் முன்னணி தலைவி ஆகியோர் இன்று வெள்ளிக்கிழமை (19) சமய கிரிகைகளுடன்  சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 1988 ம் ஆண்டு இந்திய இராணுவத்தினரை வெளியேறுமாறு கோரி 8 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அன்னை பூபதியம்மா மட்டக்களப்பு மாமாங்கேஸ்வர ஆலைய முன்றலில் மாச் 19 ம் திகதி உண்ணாவிரத போராட்டத்தில் தொடர்சியாக ஈடுபட்டு ஏப்பில் 19 ம் திகதி உயிர்நீத்தார்.

இந்த நிலையில் அவரது 36 வது ஆண்டு நினைவேந்தலையிட்டு அவரது சமாதியில் இன்று காலை 10 மணியளவில் அவரது மகள் மற்றும் அப்போது அவருடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட அன்னையர் முன்னணி மட்டு அம்பாறை தலைவி கலைவாணன் பவளராணி உட்பட உறவினர்கள் கலந்து கொண்டு சமய கிரிகைகளுடன் அன்னையின் சமாதிக்கு மலர் தூவி மாலை அணிவித்து சுடர் ஏற்றி அஞசலி செலுத்தினர்.






Powered by Blogger.