மாங்காட்டில் பாரிய விபத்தை ஏற்படுத்திய பஸ் - களுவாஞ்சிகுடி பொலிசாரால் விசாரனை முன்னெடுப்பு!!


மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் மாங்காடு பகுதியில் இன்று வியாழக்கிழமை 14.02.2024 பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேரூந்து ஒன்று வீதியருகில் இரும்பு தளபாடங்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வட்டா ரக வானத்தில் மோதுண்டத்தில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.

இவ்விபத்துச் சம்பத்தில் போரூந்தில் பயணித்தவர்களில் 5 பேருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெய்வாதீனமா உயிர் சேதங்கள் ஏற்படவில்லை எனவும் பொரிசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் இவ்விபத்துச் சம்பவத்தில் அருலிருந்து பேருந்து தரிப்பிடம் முற்றாக உடைந்து சேதமடைந்துள்ளதுடன், வட்டா ரக வாகனமும், போருந்தின் முன்பகுதியில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரனைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிசார்  முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




Powered by Blogger.