நாமும் சளைத்தவர்கள் அல்ல - விபுலானந்த வித்தியாலய விளையாட்டுப் போட்டியில் சாதித்துக் காட்டிய பழைய மாணவிகள்!!


மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம் விபுலானந்த வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று (14) திகதி பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் கே.தவேந்திரகுமார் தலைமையில் இடம்பெற்ற இல்ல விளையாட்டுப் போட்டி பாடசாலையின் பழைய மாணவர்களின் அனுசரனையுன் மிக விமர்சையாக இடம்பெற்றது.

விளையாட்டுப் போட்டியானது  பேண்ட் வாத்தியங்கள் இசைக்கப்பட்டு அதிதிகள் வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து தேசியக்கொடி, பாடசாலையின் கொடி மற்றும் இல்லங்களுக்கான கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான விளையாட்டுக்கள், ஏனைய பிரிவு மாணவர்களுக்கான விளையாட்டுக்கள், வினோத, உடை போட்டி, ஆசிரியர்களுக்கான போட்டிகள் மற்றும் பெற்றோர்களுக்கான போட்டிகள் என்பன இடம்பெற்றதுடன் உடற் கண்காட்சியும் மற்றும் சம்பா பேண்ட் வாத்திய கண்காட்சியும் இடம் பெற்றது.

அதனைத் தொடர்ந்து போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான வெற்றிக்கிண்ணமும் சான்றிதழ்களும் பிரதம அதிதி உள்ளிட்ட அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.

இவ்வருட இல்ல விளையாட்டுப் போட்டியில் இளங்கோ இல்லம் முதலாவது இடத்தையும், வள்ளுவர் இல்லம் இரண்டாம் இடத்தையும் மற்றும் கம்பர் இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டதுடன் இல்லங்களுக்கான வெற்றிக்கிண்ணங்கள் பாடசாலையின் அதிபர் மற்றும் பழைய மாணவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

இவ் இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளரும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளருமான எந்திரி என்.சிவலிங்கம் அவர்களும் விசேட அதிதிகளாக வலயக் கல்வி அலுவலக அதிகாரிகளும், முன்னால் பிரதி அதிபர், கிராம சேவையாளர்கள், மத தலைவர்கள், பாடசாலையின் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

போட்டிகள் இடம் பெற்றுக்கொண்டிருந்த போது பழைய மாணவர்களுக்கான அஞ்சலோட்டம் இடம் பெற்று முடிந்ததும், பழைய மாணவிகளுக்கான பந்து மாத்துதல் போட்டி அறிவிக்கப்பட்ட போது, நாங்களும் சளைத்தவர்கள் அல்ல எங்களுக்கும் அஞ்சலோட்டம் வைக்க வேண்டுமென சவால் விடுத்த பழைய மாணவிகளின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதை தொடர்ந்து பழைய மாணவில் அஞ்சல் ஓட்டத்தில் பங்குபற்றி தமக்கு இன்னமும் விளையாட்டில் ஆர்வம் உள்ளது என்பதை நிறுவித்துள்ளதுடன், கற்ற பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.








































Powered by Blogger.