தனியார் காணியிலிருந்து சக்தி வாய்ந்த மோட்டார் ஷெல் மீட்பு!!


தனியார் காணியிலிருந்து மோட்டார் ஷெல் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் கொக்குளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளியமுனை பகுதியிலுள்ள தனியார் காணியிலிருந்து வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த காணி உரிமையாளரினால் நேற்று சுத்தம் செய்யப்பட்ட போது காணியில் மோட்டார் ஷெல் இருந்துள்ளதை கண்டுள்ளார்.

இதையடுத்து கொக்குளாய் பொலிஸாருக்கு காணியின் உரிமையாளரினால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் செல்லினை மீட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணையினை கொக்குளாய் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Powered by Blogger.