மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மகிளடியூற்று தாந்தாமலை பிரதேசத்தை சேர்ந்த குடும்பப்பெண் ஒருவர் கடந்த எட்டு மாதமாக கருவுற்றிருந்த நிலையில் வீட்டின் அருகில் உள்ள பொதுக்கிணற்றில் இருந்து நேற்று(13) சடலமாக மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைய குறித்த சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்டவைத்தியரினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது மேற்படி அதிர்ச்சி தரும் சம்பவம் நடந்துள்ளது.
அதாவது பிரேதப் பரிசோதனையில் ஆரோக்கியமான குழந்தை ஒன்று தாயின் வயிற்றினுள் இருந்துள்ளது. குறித்த அழகிய ஆண் குழந்தை இறந்த நிலையில் வெளியில் எடுக்கப்பட்டது.
மரண விசாரணைகளின் பின்னர் இருவரின் உடலங்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது குறித்த மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலீசார் மேற்கொண்ட வருகின்றனர்.