பெக்பே சோலர் தனியார் நிறுவனத்தின் சூரிய சக்தி செயற்திட்டத்தின் மற்றுமொரு உபநிலையம் இன்று மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கொம்மாதுறை பகுதியில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
எஸ்.பி.எஸ் ii வவுணதீவு 6 மற்றும் 7 ஆகிய சூரிய சக்தி செயற்திட்டத்தின் உபநிலையம் என பெயர் சூட்டப்பட்டு மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகரவினால் நிலையத்தின் நினைவுப் படிகம் திறைநீக்கம் செய்யப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் வவுணதீவு பிரதேசத்தில் உள்ள சூரியசக்தி நிலையத்துடன் இணைக்கப்பட்டு மின்சார விநியோகம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர், செங்கலடி பிரதேச சபை செயலாளர், பெக்பே சோலர் தனியார் நிறுவனத்தின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
விவசாயிகளின் தேவைகளுக்காக வவுணதீவு பிரதேசத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்ட சூரியசக்தி செயற்திட்டமானது இன்றையதினம் மேலும் விஸ்தரிக்கும் நோக்கில் ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கொம்மாதுறை பகுதியில் திறந்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.