பாடுமீன் சதுரங்க கழகத்தின் சதுரங்க சுற்றுப் போட்டி!!


பாடுமீன் சதுரங்க கழகம் தனது ஆறாவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு ஐந்து பிரிவுகளுக்கு இடையில் நடாத்திய சதுரங்க சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்ற வீர வீராங்கனைகளுக்கான கௌரவிப்பு நிகழ்வு நேற்று மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

பாடுமீன் சதுரங்க கழக செயலாளர் ஏ.சௌத்திரி தலைமையில் பாடுமீன் சதுரங்க கழக ஏற்பாட்டில் 8 சுற்றுப்போட்டிகளாக கடந்த மூன்று நாட்களாக நடாத்தப்பட்ட சதுரங்க சுற்றுப் போட்டியில் அகில இலங்கை ரீதியில் 250 பாடசாலை மாணவர்கள் மற்றும் செஸ் கழகத்தினர் கலந்து கொண்டு போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.

அகில இலங்கை ரீதியில் சதுரங்க போட்டியில் கலந்துகொண்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் வீரர்களுக்கு இதன் போது பணப் பரிசுடன் சான்றிதழ்களும் வெற்றி கிண்னங்களும், பணப் பரிசில்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில்  பிரதம அதிதியாக  மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஜீ.சுகுணன் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்ததுடன், குறித்த நிகழ்விற்கு சிறப்பு அதிதிகளாக  கிழக்கு மாகாண சிரேஸ்ட விளையாட்டுத்துறை உத்தியோகத்தர் வே.ஈஸ்வரன், மட்டக்களப்பு கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலய அதிபர் அருமைதுறை, மெதடிஸ்த மத்திய கல்லூரி அதிபர் பாஸ்கரன், பாடுமீன் சதுரங்க கழக ஆலோசகர் அழகுதுறை ஜெயகரன் மற்றும் பாடுமீன் சதுரங்க கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நடாத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான சதுரங்க போட்டியில்  சிறந்த வீரர்கள், சிறந்த பெண் வீராங்கனைகள், போட்டிக்கான சிறந்த விற்பணர் என வெற்றி பெற்றி ஈட்டிய அனைவரும் இதன் போது கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.












Powered by Blogger.