வாகரையில் "அவளது பலம் நாட்டிற்கு முன்னேற்றம்" எனும் தொனிப் பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு

"அவளது பலம் நாட்டிற்கு முன்னேற்றம்" எனும் தொனிப் பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு கோறளைப்பற்று வடக்கு வாகரையில் இடம்பெற்றது.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி "அவளது பலம் நாட்டிற்கு முன்னேற்றம்" எனும் தொனிப்பொருளில் மகளிர் தின நிகழ்வு கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தில் (21) திகதி பிரதேச செயலாளர் எந்திரி.ஜீ அருணன் அவர்களின் தலைமையில் கோறளைப்பற்று வடக்கு வாகரை கலாசார மண்டபத்தில் பிற்பகல் 02 மணிக்கு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜெ.ஜெ முரளிதரன் அவர்கள் முதன்மை அதிதியாக கலந்து சிறப்பித்ததோடு சிறந்த பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான விருதுகளை வழங்கி கௌரவித்தார். 

தொடர்ச்சியாக சிறந்த பெண் சுயதொழில் முயற்சியாளர்கள், தேசிய ரீதியில் தெரிவான மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் இங்கு கலந்து கொண்ட பெண்கள், சிறுவர் அமைப்புக்களால் மகளிர் தின சிறப்பு பேச்சு, நடனம், பாடல், நாடகம் என நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி தலைமை முகாமையாளர், நிருவாக உத்தியோகத்தர் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மாதர் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், சிறுவர்கழக உறுப்பினர்கள் மற்றும் சமூக தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.







Powered by Blogger.