மட்டக்களப்பு திறந்த பல்கலைக்கழகத்தின் தாய்மொழி தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வு திறந்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உதவி பணிப்பாளர் எந்திரி ஏ.டீ.கமல் நாதன் தலைமையில் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட கேட்போர் கூடத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன், கலை நிகழ்வுகள் அரங்கை அலங்கரித்தது.
தமிழ் மொழியின் அருமை பெருமைகள் பற்றி விளக்கமாக விரிவுரையாளர்களினாலும் மாணவர்களினாலும் எடுத்துக்கூறப்பட்டதனைத் தொடர்ந்து நன்றியுரையோடு விழா இனிதே நடைபெற்று முடிந்தது.
இவ் விழாவானது திறந்த பல்கலைக்கழகத்தின் தமிழ் மற்றும் தமிழ் மொழியை கற்பித்தலில் சிறப்பு கலைமாமணி கற்கை நெறியினை மேற்கொள்ளும் மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .