அனைத்து அரச பாடசாலை மாணவர்களுக்கும் 2024ஆம் ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்க கல்வி அமைச்சு ஏற்பாடு
அனைத்து அரச பாடசாலை மாணவர்களுக்கும் 2024ஆம் ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்க கல்வி அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.
இதன்படி, சகல பாடசாலைகளுக்கும் விநியோகிப்பதற்காக பாடசாலை பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வலய கல்வி அலுவலகங்களுக்கும் தற்போதைய நிலையில் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதுவரை பாடசாலை பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் கிடைக்கப்பெறாத பாடசாலைகள் ஏதேனும் இருப்பின் அதனை உடனடியாக பின்வரும் தொலைபேசி / தொலைநகல்/மின்னஞ்சலுக்கு அறிவிக்குமாறு கல்வி அமைச்சு அந்தந்த அதிபர்களுக்கு அறிவித்துள்ளது.
அதன்படி கீழ்காணும் தொலைபேசி இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல் ஊடாக அதுகுறித்து அறிவிக்குமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
புத்தகங்கள்:
தொலைபேசி: 0112784815 /0112785306
தொலைநகல்: 0112784815
மின்னஞ்சல்:epddistribution2024@gmail.com
சீருடைகள்:
தொலைபேசி: 0112785573
தொலைநகல்: 0112785573
மின்னஞ்சல்: schoolsupplymoe@gmail.com