மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை 2024 ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி (12) செவ்வாய்க்கிழமை மாலை 3.00 மணியளவில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை அதிபர் அருட்சகோதரி நித்தாஞ்சலி தலைமையில் வெபர் விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்ற விளையாட்டு நிகழ்விற்கு ஆன்மீக அதிதியாக அருட்தந்தை பிரகாஷ் ரெட்டி கலந்து கொண்டதுடன், நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தோல் மருத்துவ நிபுணர் வைத்தியகலாநிதி நல்லரத்தினம் தமிழ்வண்ணன் மற்றும் கௌரவ அதிதிகளாக கிழக்குப் பல்கலைக்கழக வர்த்தகம் மற்றும் முகாமைத்துவப் பொருளாதார பீட பேராசிரியர் டி.பவன், சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு வலயக்கல்வி உதவி உடற்கல்விப் பணிப்பாளர் வி.லவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த வருடத்திற்கான இல்ல விளையாட்டு போட்டியில் மாரி இல்லம் 485 புள்ளிகளைப் பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.
அத்தோடு ப்ரீடா இல்லம் 452 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும், கசில்டா 368 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தையும் 332 புள்ளிகளைப் பெற்று கென்செலியா இல்லம் நான்காவது இடத்தை தன் வசப்படுத்தியிருந்தது.
அதிதிகள் வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து ஆரம்பமாகிய வியையாட்டுப் போட்டியில், ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு, அணி நடை, உடற்பயிற்சிக் கண்காட்சி, பேண்ட் வாத்தியம் ஆகியன அனைவரதும் கவனத்தை ஈர்த்தன.
இதன் போது பாடசாலையின் ஆசிரியர்கள், பாடசாலையின் பழைய மாணவிகள், மாணவிகளின் பெற்றோர்கள், மற்றும் பொதுமக்கள் என பலரும் கொண்டு சிறப்பித்துள்ளனர்.