வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினால் கிழக்கில் 300 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!!

விருட்சம் உதவும் உள்ளங்கள் அமைப்பின் ஒழுங்கமைப்பினூடாக யாழ்ப்பாணம் இளவாளை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினூடாக 1000 மாணவர்களுக்கான "உயர்த்தும் கரங்கள்"  வேலைத்திட்டத்தினூடாக  கற்றல் உபகரணங்களை வழங்கும்  நிகழ்ச்சித்திட்டம் இடம்பெற்றுவருகின்றது. 

அதன் அடிப்படையில் கிழக்கு மாகாணத்திற்காக 300 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கவுள்ள நிலையில் அதன் முதற் கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 100 மாணவர்களுக்கான புத்தகப் பைகளும் அப்பியாசக்கொப்பிகளும் மட்டக்களப்பு விபுலானந்ந வித்தியாலயத்தில் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் அம்பாறை சித்தானைக்குட்டி ஆலயம், காரைதீவு மற்றும் தமண மகா வித்தியாலயம் ஆகியவற்றில் 125 மாணவர்களுக்கும், திருகோணமலையில் கிளிவெட்டி மகாவித்தியாலயத்தில் 75 மாணவர்களுக்குமாக மொத்தமாக 300 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.















Powered by Blogger.