அம்பாந்தோட்டையில் கொழும்பு – வெல்லவாய பிரதான வீதியில் பயணித்த பஸ்ஸில் மிதி பலகையில் பயணித்த நபரொருவர் தவறி வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் அம்பந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் பஸ்ஸின் மிதி பலகையில் நின்று பயணித்துக்கொண்டிருந்த போது பஸ் நடத்துநரிடம் பயணச்சீட்டை பெற்று மிகுதி பணத்தை தனது பணப்பையில் வைக்க முற்பட்ட போது தவறி வீழ்ந்து காயமடைந்துள்ளார்.
இதனையடுத்து அவர், பஸ் சாரதி மற்றும் நடத்துநர் ஆகியோரின் உதவியுடன் அம்பந்தோட்டை தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.