உலக மீட்பின் இரச்சகர் இயேசு பாலகனின் பிறப்பினை கொண்டாடும் கிறிஸ்மஸ் ஆராதனை மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இன்று (25) திகதி காலை இடம்பெற்றது.
சீயோன் தேவாலயத்தின் பிரதம போதகர் ரொசான் மகேசன் தலைமையில் இடம்பெற்ற கிறிஸ்மஸ் ஆராதனையில் பெருந்திரளான இறைவிசுவாசிகள் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து கலந்துகொண்டதுடன், இறை பிரார்த்தனையிலும் ஈடுபட்டிருந்தனர்.
நாட்டின் பல பாகங்களிலும் இருந்தும் அதிகளவிலான இறைவிசுவாசிகள் கிறிஸ்மஸ் விசேட ஆராதனையில் கலந்துகொண்டிருந்ததுடன், தேவாலய வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.