இலஞ்ச ஊழல் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு (28) திகதி காத்தான்குடி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் தலைமையில் காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இச்செயலமர்வின் வளவாளராக பிரதேச செயலாளர் கலந்து கொண்டதுடன் நூற்றுக்கு மேற்பட்ட கள உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இச் செயலமர்வில் ஊழல், இலஞ்சம் தொடர்பாகவும் ஊழலின் பல்வேறுபட்ட வடிவங்கள் மற்றும் ஊழலின் வகைகள், சட்டத்திற்கெதிரான கையூட்டல் பணிக்கொடை, கமிசன் பெற்றுக் கொள்ளல், ஊழலின் தாக்கங்கள், முறையற்ற பாரபட்சம், சர்வதேச மட்டத்தில் இனங்காணப்பட்ட ஊழலின் விளைவுகள், ஊழலைத்தடுக்கும் சட்ட திட்டங்கள் ஆகியவற்றிற்கான தெளிவூட்டல்கள் பிரதேச செயலாளரால் தெளிவுபடுத்தப்பட்டது.
இந்நிகழ்விற்கு பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.எஸ்.தனுஜா, கிராம நிருவாக உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜரூப், மற்றும் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.பீ.ஜெயராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.